கீழப்பாவூர் பேரூராட்சியில் சிறு மின் விசை பம்பு திறப்பு

83பார்த்தது
கீழப்பாவூர் பேரூராட்சியில் சிறு மின் விசை பம்பு திறப்பு
கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் 7 இடங்களில் அமைக்கப்பட்ட சிறுமின் விசை பம்பு பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற தலைவர் பி. எம். எஸ். ராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர்.

ரூ. 9 லட்சம் மதிப்பீட்ல் பஜார் அம்மன் கோவில் முன்பு, ரூ. 9. 20 லட்சம் மதிப்பீட்டில் யாதவர் வடக்கு தெரு, ரூ. 9. 40 லட்சம் மதிப்பீட்டில் இல்லத்தார்தெரு, ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அக்ரஹாரம் 3ம் தெரு,

ரூ. 10. 20 லட்சம் மதிப்பீட்டில் ராஜேஸ்வரி நகர், ரூ. 10. 40 லட்சம் மதிப்பீட்டில் செல்லையா நாடார் தெரு, ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் பெரிய முத்தாரம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சிறுமின் விசை பம்பினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி தலைவர் ராஜன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பொன் செல்வன், ராதா, கோடீஸ்வரன், மாலதி, ஜெயசித்ரா, கனக பொன்சேகா, இசக்கிராஜ், அன்பழகு, ஜேஸ்மின், விஜி, முத்துலட்சுமி இசக்கிமுத்து, பவானி, தேவஅன்பு,

வெண்ணிலா, சாமுவேல் துரைராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி