தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவர் தொடர்ந்து தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரை செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
நேற்று காலை முதல் இரவு வரை வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமங்கள் தோறும் சென்று திறந்த வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளருடன் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் சென்றனர்.