பிளம்பிங் வேலையின் போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி

72பார்த்தது
சங்கரன்கோவில் அருகே புது வீட்டிற்கு பிளம்பிங் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி ஆனந்த் என்ற தொழிலாளி பலி.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குருக்கள்பட்டி கிராமத்தில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வீட்டில் பிளம்மிங் வேலைக்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் அருகே சென்ற உயர் அழுத்த மின் கம்பி மூலம் அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து ஆனந்த் பலியானார்.
பலியான ஆனந்துக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
பிளம்பிங் வேலைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி