திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

603பார்த்தது
திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கரன்கோவில் தேரடி திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்த கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசும் பொழுது உதய சூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என்றும்
ராணி ஸ்ரீ குமாரை
3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும்
கலைஞர் சொல்வது போல சொல்வதை செய்வோம் என்ற சொல்லுக்கு இணங்க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

தவழ்ந்து தவழ்ந்து சென்று முதலமைச்சராகிய சசிகலாவிற்கே துரோகம் செய்தவர் எடப்பாடி.
தவழ்ந்து தவழ்ந்து முதலமைச்சரானவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம். கட்டணமில்லா பேருந்து மூலம் பெண்கள் மாதம் 900 ரூபாய் சேமிப்பு செய்கிறார்கள்.
புதுமைப் பெண் திட்டம் மூலம் ஒவ்வொரு வருஷமும் 3 லட்சம் பெண்கள் பயன்படுகிறார்கள்.
கடும் நிதி நெருக்கடிகளிடே திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் வாக்குறுதி அளித்தார்.