நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்தில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து, காவல் துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரிடம் நீலாங்கரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.