தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து தற்போது கல்வி பயின்று வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகள் கல்வியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்லும் விதமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பள்ளிசீருடை, புத்தகப்பை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி மாணவர் குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார்,
உதவி தலைமை ஆசிரியர் தாயம்மாள் ராணி,
உடற்கல்வி ஆசிரியர் நேருதாஸ் கென்னடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பொருட்களை வழங்கினர்.