குடிநீர் வேண்டும் -கடையம் பெரும்பத்து பஞ். , தலைவர் கோரிக்கை

72பார்த்தது
குடிநீர் வேண்டும் -கடையம் பெரும்பத்து பஞ். , தலைவர் கோரிக்கை
கடையம்பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் கடையம் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் அதிகாரிகளுக்கு இன்று அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: -

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கடையம் பெரும்பத்து ஊராட்சி பகுதிக்கு ராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டாரானது அவ்வவ்போது அதிகளவு வீசும் காற்றின் காரணமாக மின் தடை ஏற்பட்டு, மோட்டாரை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் 6 அல்லது 8 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் கட்டாயத்திற்கு ஊராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்திடும் வகையில்,  தடையின்றி மின்சாரம் கிடைத்திட அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சபரிநகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிணற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்ப துடன், அப்பகுதியில் உள்ள பழுதான சாலைகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி