தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து பழைய குற்றாலம் அருவி ஆயிரப்பேரி பஞ்சாயத்தில் இருந்து வருகிறது.
இதில் தற்போது வனத்துறை தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த அருவியை கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள்.
இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே தொடர்ந்து ஆயிரப்பேரி பஞ்சாயத்தில் குற்றாலம் இருக்க வேண்டும் மற்றும் குற்றாலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது என அமைச்சர்யிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.