நாடு சந்தித்துள்ள 18 தேர்தல்களில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்று நெருக்கடி நிலை காலத்தில் நடந்தது அதன் பிறகு தற்போதைய தேர் தல் தேர்தல் ஆணையம் பாஜவின் கைகளில் உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
யஒப்புகை சீட்டு முழுமையாக எண்ணப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகள் சக கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களிடம் வாக்கு சேகரிக்கின் றனர். ஆனால் பாஜ தேர்தல் ஆணையம் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித்துறை ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
இந்த பாராளுமன்ற தேர்தல் 2 வது சுதந்திரப் போர் ஆகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கச்சத்தீவு விவகாரத்தை பற்றி பாஜகவினர் இப்போது பேசுகின்றனர்.
ஆனால் 10 ஆண்டுகளில் அதனை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதை குறித்து பேச மறுக்கின்றனர். தேர்தல் பத்திர ஊழல், எதிர்க் கட்சிகளை பழி வாங்குவது, வேலைவாய்ப்பு இல்லை இவற்றையெல்லாம் மறைப்பதற்காக திசை திருப்புவதற்காககச்சத்தீவு குறித்து பேசுகின்றனர்.
தமிழ்நாட்டில் வந்து ஊழல் ஊழல் என்று பேசியவர்கள் தற்போது தேர்தல் பத்திர ஊழல் வந்த பிறகு புதிதாக எதை யாவது பேசி திசை திருப்புகின்றனர்.
மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக படுதோல்வி அடையும் இதுதான் உண்மை நிலை என்றார்.