டிராக்டர் வாகனம் மோதி மின்மாற்றி சேதம் மின் துண்டிப்பு

74பார்த்தது
டிராக்டர் வாகனம் மோதி மின்மாற்றி சேதம் மின் துண்டிப்பு
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அதன் பகுதிக்கு மின்விநியோகம் வழங்கும் மின்மாற்றியின் மீது தனியார் வாகனம் மோதியதில் மின்மாற்றி முற்றிலும் சேதமடைந்தது.

அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது
இதனையடுத்து உதவி மின் பொறியாளர் முருகன் தலைமையில் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பணிகள் முடிந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்பட்டது.

இதைக் கண்ட அப்பகுதி இப்போது மக்கள் மின் ஊழியர்களை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி