தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியாபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதனை சுந்தரபாண்டியபுரம் நகர திமுக சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே நகர திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதை தொடர்ந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.