தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். ஊருக்கு வெளியே உள்ள இவருக்குச் சொந்தமான கிணற்றில் சுமாா் 2 வயதுடைய ஆண் மான் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது.
இத்தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான வீரா்கள், அந்த மானை உயிருடன் மீட்டு வன காவலரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து அது வனப்பகுதியில் விடப்பட்டது.
தண்ணீரைத் தேடி வந்த மான், கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.