தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
பள்ளம் தோண்டப்பட்டு தற்போது பணிகள் ஏதும் நடைபெறவில்லை. அருகில் இரண்டு அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளம் சாலை ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
உடனே சம்பந்தப்பட்ட அதிகாரி வந்து பார்வையிட்டு பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.