சிலிண்டரை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவன்

83பார்த்தது
சிலிண்டரை தலையில் போட்டு மனைவியை கொன்ற கணவன்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் வயது 50. இவரது மனைவி முத்துலட்சுமி வயது 45. இவர்களுக்கு எட்டு பிள்ளைகள் உள்ளனர். கணேசன் மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரை முத்துலட்சுமியின் தலையில் போட்டுள்ளார். இதில் முத்துலட்சுமி தலை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆலங்குளம் போலீசார் கணேசனை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி