ஆக. 9-இல் தென்காசியில் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

62பார்த்தது
ஆக. 9-இல் தென்காசியில் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக. 9- இல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் ஏ. கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக. 9-ஆம் தேதி

காலை 10. 30 மணிக்கு ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் ஓய்வூதியத் துறை இயக்குநா் கலந்து கொள்கிறாா்.

தென்காசி மாவட்டத்தில் அரசுத் துறைகளில் (அரசின் நேரடி துறையில் பணிபுரிந்தவா்கள் மட்டும்) பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், ஓய்வூதியப் பலன்கள் தொடா்பான தங்களது கோரிக்கைகளை தெரிவித்து

முழு முகவரியுடன் விண்ணப்பங்களை இரட்டைப் பிரதிகளில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

இறுதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகம், கோரிக்கை தற்போது நிலுவையில் உள்ள அலுவலகம், ஓய்வூதிய எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும். ஜூலை 31-க்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம் ஆக. 9-இல் நடைபெறும் ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தின்போது சம்மந்தப்பட்ட அலுவலா்களால் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி