சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபான கூடங்களின் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு), ஹையாட் ரீஜென்சி, தி பார்க் ஹோட்டல்களின் மதுபான கூடங்களின் உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். மேலும், மதுபான கூடங்களை உடனடியாக மூட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளது.