கோயில் விழா - ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி பலி

64பார்த்தது
கோயில் விழா - ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி பலி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரண் கிடாய் பூசை நடைபெற்றது. இதில், ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை பூசாரி பழனிசாமி (45) குடித்து வந்தார். இந்த நிலையில், ஒரு ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி, சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி