எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின்களை இந்திய ரயில்வே உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 4 நாடுகள் மட்டுமே இவ்வாறான புகையில்லாத இன்ஜின்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றின் இயந்திரத்திறன் 500 - 600 குதிரைத் திறன் வரை மட்டுமே இருக்கும். ஆனால் இந்தியா இரண்டு மடங்கு குதிரைத் திறன் கொண்ட இன்ஜின்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிய இந்த இன்ஜின் 1200 குதிரைத் திறன் கொண்டதாகும்.