கர்நாடக பெண் அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர், அவரது தம்பியும் எம்எல்சியுமான சன்னராஜ் ஹட்டிஹோலி ஆகியோர் கார் விபத்தில் காயமடைந்தனர். இருவரும் பெங்கரூருவில் இருந்து பெலகாவி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கார் இன்று(ஜன.14) அதிகாலை கிட்டூர் அருகே வந்தபோது ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது. அதன்மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இருவரும் காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.