ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி என்பவர் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், நாதக வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, பாஜக, தேமுதிக என எந்தக்கட்சியும் போட்டியிடாததால் இந்தமுறை இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஈரோடு ஓடத்துறையைச் சேர்ந்த சீதாலட்சுமி, இதற்குமுன் சட்டமன்ற தேர்தல்களில் நாதக சார்பில் போட்டியிட்ட அனுபவம் கொண்டவர்.