தமிழிசைக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி!

64பார்த்தது
தமிழிசைக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி!
திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்ற தமிழிசையின் கருத்துக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது. பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது, மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது. அதனால்தான் இதன் பெயர் 'நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது" என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி