ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், “எனது வழிகாட்டியும் நலம் விரும்பியுமான ராமோஜி ராவின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர் அவர். ராமோஜி ராவ் என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்ததோடு உத்வேகம் அளித்தவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என பதிவிட்டுள்ளார்.