டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: அச்சுறுத்தும் மழை

50பார்த்தது
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: அச்சுறுத்தும் மழை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 29) பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டி நடக்கும் பிரிட்ஜ்டவுனில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குளிர்ந்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு 70 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி