திமுக, அதிமுக இரண்டு கட்சிக்கும் ஆதரவு

78பார்த்தது
திமுக, அதிமுக இரண்டு கட்சிக்கும் ஆதரவு
தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும், தமிழகத்தில் திமுக கூட்டணியிலும் அங்கம் வகிப்பதாக அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன், கடந்த சில நாள்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில், அக்கட்சியின் ஒரு பிரிவினர் அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வந்து திமுக கூட்டணிக்கு ஆதரவு கடிதத்தை அளித்தனர். இது குறித்து அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திருப்பூர் ராஜசேகரன் கூறுகையில், தங்களிடம் 80 சதவீத ஆதரவாளர்கள் இருப்பதாகவும், தங்கள் ஆதரவு திமுகவுக்கு தான் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி