முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி

52பார்த்தது
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி
திமுக இளைஞரணி 45 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், இளைஞரணியின் ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலம், 2026 தேர்தல் வெற்றியை திமுக தலைவரின் கரங்களில் ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளார். இன்று காலை 45 ஆம் ஆண்டு இளைஞர் அணி தொடக்க விழா நடைபெற்றது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி