புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் மற்றும் ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரண்மனைத் திடலில் செங்கல் கட்டுமானங்களும் கண்ணாடி மணிகள், பச்சைக்கல் மணி, கண்ணாடி வளையல்கள், இரும்பு ஆணிகள் போன்ற தொல்பொருட்களும் கிடைக்கப்பெற்றன. மேலும், கண்ணிற்கு மைத்தீட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் 3 செ. மீ நீளமுள்ள செம்பினால் ஆன அஞ்சனக்கோல் ஒன்றும் கிடைத்திருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.