தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர், கும்பகோணம் ரயில் நிலையங்கள், மண்டல ரயில்வே பயிற்சி நிறுவனம் ஆகிய ஏழு இடங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் Eat Right Station சான்றிதழை வழங்கியுள்ளது. பாதுகாப்பான, சத்தான உணவை வழங்குவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.