மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மணி நேரம் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்றிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.