பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு 24, 25ஆம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த வேல் அரங்கம், 3d திரையரங்கு, விஆர் தொழில்நுட்பத்தில் அறுபடை வீடுகளை தரிசனம் செய்யும் நிகழ்வு, புத்தக கண்காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மாநாடு முடிந்தும் வருகிற 30ஆம் தேதி வரை கண்காட்சியை பார்வையிடலாம். நேற்று (ஆக., 27) பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை நிர்வாகம் சார்பில் அழைத்து வந்தனர்.