உ.பி: ஒரு மாணவனை விரும்பிய 2 மாணவிகள் சாலையில் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீ போல் பரவி வருகிறது. அமிநகர் சராய் நகரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அதே பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் விரும்பியுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் மோதலாக முற்றி, ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கி சாலையில் உருண்டு, பிரண்டு சண்டை போட்டுள்ளனர்.