அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ரூ.163.81 ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். மேலும், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1,000-யும் சி, டி பிரிவு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், உதவியாளர்களுக்கு ரூ.500-யும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.