சேலம்: தாரமங்கலம் அருகே கணக்குப்பட்டியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (45). இவரது மகள் ஜீவிதா (15). 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் காய்ச்சலால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து பின் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காய்ச்சல் அதிகமாகி ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், உயிரிழந்தார்.