உலகளாவிய புற்றுநோய் ஆய்வகமான Globocan-னின் கணிப்பின்படி 2050 வாக்கில், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 55% க்கும் மேலாக உயர்ந்து 503,448 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை 2022 ல் இருந்ததை விட கிட்டத்தட்ட 70% அதிகரித்து 350,956 ஆக உயரலாம். கருப்பை புற்றுநோய் ஒரு உலகளாவிய பிரச்சனை எனவும் அதன் அபாயத்தை குறைக்க பல விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.