நாளை மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகிறது ‘ரிமல்’ புயல்!

85பார்த்தது
நாளை மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகிறது ‘ரிமல்’ புயல்!
வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 23ஆம் தேதி காலை 5.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்றத்தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து நாளை இரவுக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும் நாளை மறுநாள் நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி