T20 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணி அறிவிப்பு

80பார்த்தது
T20 உலகக் கோப்பை பாகிஸ்தான் அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அணியின் கேப்டன் பொறுப்பு பாபர் அசாமிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு உலகக் கோப்பை போட்டிகள் ஜூன் 2-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அணியில் பாபர் ஆசம், ஷஹீன் அப்ரிடி, முகமது ரிஸ்வான், அப்ரார், ஹரிஸ் ரவூப், அப்பாஸ் அப்ரிடி, நசீம் ஷா, ஆசம் கான், இஸ்திகார், அமீர், சைம் அயூப், உஸ்மான் கான், ஃபகார் ஜமான், இமாத், ஷதாப் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி