திண்டுக்கல்: பழனி மலைக் கோயிலுக்கு இடைப்பாடி பருவதராஜகுல மகாஜன பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் காவடிகளுடன் நேற்று முன்தினம் குவிந்தனர். இடைப்பாடி பருவதராஜகுல படித் திருவிழாக்குழு சார்பில் மலைக் கோயிலில் படிபூஜை நடைபெற்றது. பெண்கள் முருகன் வழிபாடல்களைப் பாடி வழிபாடு செய்தனர். தொடர்ந்து மலைமேல் வெளிப் பிரகாரத்தில் பிச்சிப் பூ, சம்மங்கி, மரிக்கொழுந்து வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் ஓம் வடிவில் வரைந்து வழிபாடு செய்தனர்.