ரூ.13 கோடியில் அதிநவீன மூளை ரத்தநாள ஆய்வகம் - மா.சுப்பிரமணியன்

68பார்த்தது
ரூ.13 கோடியில் அதிநவீன மூளை ரத்தநாள ஆய்வகம் - மா.சுப்பிரமணியன்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அதிநவீன மூளை ரத்தநாள ஆய்வகம் திறக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்ல, இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனைகளிலும், CT-Scan, MRI, Dialysis, Digital X-Ray, MammoGram, Robotic அறுவை சிகிச்சை கருவிகள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் பல, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பயன்பாட்டில் உள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி