ஸ்டாலின் பிரதமரை சந்திக்க வேண்டும்: ஜெயக்குமார்

61பார்த்தது
ஸ்டாலின் பிரதமரை சந்திக்க வேண்டும்: ஜெயக்குமார்
இலங்கை அரசின் சர்வாதிகார‌ போக்கால் மீனவர்கள் துன்புறுத்தப்படுவதை கண்டு ஸ்டாலின் கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், ஒரே‌‌ ஆண்டில் 250க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தங்கள்‌ உறவுகளை கடலில் தொலைத்து கரையில் காத்திருக்கும் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பதில் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி