ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

80பார்த்தது
ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்
திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஆனித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்ன வாகனத்தில் சுவாமி ரத வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல, நாள்தோறும் இரவில் சிம்மம், ஆஞ்சநேயர், சேஷம், யானை வாகனங்களில் புறப்பாடாகி நகர் வலம் வந்து சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை வருகிற 7ஆம் தேதியும், சுவாமி திருக்கல்யாணம் 9ஆம் தேதியும், திருத்தேரோட்டம் 12ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி