+2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

77பார்த்தது
+2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று (ஜூன் 18) வெளியாகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் துணை தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் அதற்கான நுழைவுசீட்டை நாளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி