SRH vs KKR: சன்ரைசர்ஸ் அணி ஆல் அவுட்

57பார்த்தது
SRH vs KKR: சன்ரைசர்ஸ் அணி ஆல் அவுட்
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணி தொடக்கம் முதலே தடுமாறி வந்தது. கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி 55, கிளாசன் 32, கேப்டன் கம்மின்ஸ் 30, சமத் 16 ரன்களைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹெட் 0, அபிஷேக் சர்மா 3, நிதிஷ் ரெட்டி 9, ஷாபாஸ் அகமது 0 ரன் எடுத்தனர். கொல்கத்தா பந்துவீச்சாளர்களில் ஸ்டார்க் 3, வருண் சக்ரவர்த்தி 2, வைபவ் அரோரா, ராணா, நரைன், ரசல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி