அணில்கள் பழங்கள், கொட்டைகளைத் தின்னும் சைவப் பிராணி என நினைத்திருப்போம். ஆனால் அவை பூச்சிகள், பறவைகளின் முட்டைகள், பல்லிகள் ஆகியவற்றையும் உண்ணும் உயிரினமாகும். தற்போது அணில்கள் வோல் எனப்படும் எலி போன்ற ஒரு சிறிய விலங்கை வேட்டையாடி உண்பது தெரியவந்துள்ளது. கலிபோர்னியாவில் விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட ஆய்வில், பருவ கால மாற்றங்கள், காடுகள் அழிக்கப்படுதல், உணவு பஞ்சம் போன்ற காரணங்களால் அணில்கள் வேட்டையாடத் தொடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.