நாளை 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மோடி அமைச்சரவையில் அதிகபட்சமாக 75 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், நாளை மோடியுடன் உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவு, ரயில்வே போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மட்டும் பதவியேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.