போதையில் ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள்

77பார்த்தது
சென்னை சென்ட்ரல் - கோவை இடையே நேற்று (ஜூன்7) இரவு சேரன் விரைவு ரயில் சென்றது. அதில், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், சுமார் 20 துணை ராணுவப் படை வீரர்கள் போதையில் ஏறியதாக கூறப்படுகிறது. அவர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். அப்போது அதனை தட்டிக்கேட்ட பயணிகளை செருப்பால் அடித்து, துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். தொடர்ந்து வீரர்களை வெளியேற்றும்படி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி