'இந்தியா' கூட்டணி தொடர வேண்டும் என்பது காங்கிரஸின் எண்ணம் என டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், "தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் மக்களின் முக்கிய பிரச்சனைகள். இனி அவற்றை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ந்து விவாதிப்போம். ஆட்சியில் இருக்கிறோமோ, இல்லையோ மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க வேண்டும்” என்பன போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.