"40 எம்பிக்களும் தமிழில் பதவியேற்க வேண்டும்"

84பார்த்தது
"40 எம்பிக்களும் தமிழில் பதவியேற்க வேண்டும்"
40 எம்பிக்களும் தமிழில் பதவியேற்க வேண்டும் என விசிகவின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் எம்.பியுமான ரவிக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “தமிழ்நாடு, புதுச்சேரியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 40 உறுப்பினர்களும் 2019-ஐ போலவே இம்முறையும் தமிழில் பதவியேற்க முன்வர வேண்டும். பதிவு செய்துகொள்ளும் போதே அந்தப் படிவத்தில் Affirmation in Tamil எனக் குறிப்பிடுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி