தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் சினேகன். சில படங்களிலும் நடித்துள்ள அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தாங்கள் பெற்றோர் ஆக உள்ளதாக சினேகன் - கன்னிகா தம்பதி அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.