ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். கட்வாலா ரயில் நிலையம் வந்தபோது 8-வது பெட்டியில் கடும் புகை சூழ்ந்ததால் ரயில்வே ஊழியர்கள் பயணிகளை உடனடியாக கீழே இறக்கிவிட்டனர். இதைத்தொடர்ந்து, ரயில் பெட்டியில் புகை வந்ததற்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்கள் ஆய்வு செய்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.