சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை சார்பில் உணவு பயிற்சி மற்றும் உரிமம் பதிவு சான்றிதழ் வழங்கும் முகாமை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தொடங்கி வைத்து உணவு பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். இதில் தேவகோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் மதி, காரைக்குடி அலுவலர் அபிநயா, திருப்பத்தூர் &கல்லல் அலுவலர் ஹேமமாலினி,
எஃப். எஸ். எஸ். ஏ. ஐ தனியார் உணவு பாதுகாப்பு அமைப்பு பயிற்சியாளர் சலீம் ஆகியோர் கலந்துகொண்டு தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உணவகம், பேக்கரி கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கினர் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் பயன்படுத்தக் கூடாது, உணவு சமையல் செய்யும் அறைகளை மற்றும் கடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், பழைய பொருட்களை பயன்படுத்தக் கூடாது, இதுபோன்று பல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு வேலாயுதப்பட்டினம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த் குமார் தலைமையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எச்ஐவி செல்கவுண்ட் போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்து மருத்துவர்கள் உரிய ஆலோசனை வழங்கி மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டது.