சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் 4 ஆசிரியர்களுக்கு கடந்த 20 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து கடந்த 19ம் தேதி வட்டார கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில்ஆட்சியராகப் பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் காளையார்கோவில் வட்டாட்சியர் முபாரக் உசைன், மண்டல துணை வட்டாட்சியர் தர்மராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மாரிமுத்து, வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், ஆலிஸ் மேரி, முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் ஜெயபால், செல்வம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி, மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேச்சு வார்த்தையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதாகவும், இறுதி முடிவு மாவட்ட ஆட்சியர் மூலம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.